சத்திய வழிதான் வென்றிடுமே
உறங்கிக் கிடக்கும் விதைகள்
ஈரம் பட விழிக்குமே
அடிமைநிலை புரியும் போது
புரட்சி வெடிக்குமே
அச்சப்பட்ட பாதங்கள்
எப்படி ஆற்றைக்கடக்குமோ
துன்பப்பட்டு இருந்ததால்
கண்ணில் நீரே பிறக்குமே
தெளிவு கொண்டு எழுந்தால்
விடியல் தொடங்குமே
ஏமாற்றப்பட்ட இடத்தில்
கை ஏந்துதல் முறையோ
எதற்கும் துணிவது தான்
வாழ்வின் வழியோ
பதுங்கி வாழ்வது
புலியின் குணமோ
பகை தீர்த்து எழுவதும்
அதனின் வழியோ
ஊரே ஒன்றுபட்டால்
சரியும் முடியே
உழைக்கும் கரங்கள்தானே
எதிர்கால ஒளியே
வாடிக் இருப்பது
மகிழ்ச்சி இல்லையே
வளம் சேர்க்க
எழுவது காலக்கடனே
நாளை என்பது தாமதமே
இன்றுதான் மிக அருகினிலே
வெற்றியோ தோல்வியோ
தொடங்குங்களே
புத்தியில் நிறைந்த
அறிவுடனே
சத்திய வழிதான்
வென்றிடுமே
வட்டக்கச்சி வினோத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக