திங்கள், 17 மார்ச், 2025

 

அதிசயம் என்னவென்றால் இந்தப் பூமி

அசையாமல் சுற்றவைத்தது யாரு சாமி

ஆதியும் அந்தமும் ஆனது தூசி

ஆதாரம் உயிருக்கு காற்றே சாட்சி

இயற்கை வரைந்த ஓவியம் இங்கே

இதுவரை அறியாத உண்மைகள் உள்ளே

ஈன்ற தாயே வணக்கத்தில் முன்னே

ஈதல் ஒன்றே உயிரின் முடிவே

உதிரும் இலைக்கும் இருக்கு இலக்கு

உலரும் விதையிலே உயிரும் இருக்கு

ஊடல் இல்லாது இணையானது இலக்கு

ஊக்கம் மறந்தால் விடியாது கிழக்கு

என்னதான் ஆனாலும் இறுதியில் உரம்

எதுதான் கிடைத்தாலும் ஈற்றில் வரம்

ஏன்தான் பிறந்தோமென நினைக்காது மரம்

ஏழையாக வீழ்ந்தாலும் பயனே தரும்

ஐயம் இருப்பதே இயற்கையின் புதுமை

ஐக்கியம் ஒன்றே மானிடத் தேவை

ஒற்றைப் பருதியில் வட்டமிடும் உலகம்

ஒன்றே பரிதி என சுற்றிவரும் அண்டம்

ஓயாமல் மோதுவதே அலைகளின் கொண்டாட்டம்

ஓய்ந்து போகாது இயற்கையின் கற்பனையோட்டம்

ஔரதன் காணாத இனமும் வாழாது

ஔவியம் பேசும் குணமும் தூங்காது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  அதிசயம் என்னவென்றால் இந்தப் பூமி அசையாமல் சுற்றவைத்தது யாரு சாமி ஆதியும் அந்தமும் ஆனது தூசி ஆதாரம் உயிருக்கு காற்றே சாட்...