வியாழன், 13 மார்ச், 2025


வெல்லாமல் வாழமுடியாது

 

வாழை மரங்களை கொத்திய மரங்கொத்திகள் போல

இலகுவாக வாழ ஆசைப்பட்டு இன்னல்படும் குருவிகள்

கோபுரத்தில் கூடுகட்ட மறந்துவிட்ட பறவைகள்

கோபுரத்தின் உயரம் கண்டு நாளை அஞ்சும் குஞ்சுகள்

வியர்வை மண்ணில் சிந்தும் வரை விடியல் என்றும் தொடங்காது

நல்ல தலைவன் உள்ள நாட்டில் வியர்வை வீணாய் போகாது

நீ ஓடும் திசை சரியென்றால் ஓய்ந்திருக்ககூடாது

போகும் பாதை தவறென்றால் மாறத் தயங்கக்கூடாது

போட்டி உலகம் இதுவென்றால் வெல்லாமல் வாழமுடியாது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  அதிசயம் என்னவென்றால் இந்தப் பூமி அசையாமல் சுற்றவைத்தது யாரு சாமி ஆதியும் அந்தமும் ஆனது தூசி ஆதாரம் உயிருக்கு காற்றே சாட்...