புதன், 21 டிசம்பர், 2022

மாற்றத்தை எப்படி உருவாக்குவது

 மாற்றத்தை எப்படி உருவாக்குவது?

##############################


மாற்றம் என்பதே மனதில் உதிப்பது மனது அதை ஏற்பது வாழ்வில் செயற்படுத்துவது என்ற அடிப்படையில் அமைய வேண்டும் வெறும் பேச்சில் மட்டும் உள்ள மாற்றத்தில் ஏதும் நடந்துவிடப் போவதில்லை

சொற்களை விட செயல்களே முக்கியம் பெறுகின்றன தமிழர்கள் ஏன் மாறவேண்டும் என்ற கேள்வி உள்ளது ஆம் நாங்கள் மாறத்தான் வேண்டும் நாங்கள் மாறியதில் இருந்து மாறவேண்டும் சில பழமை நோக்கியும் சிலதை புதுமை நோக்கியும் தமிழர் வாழ்வியல் நோக்கியும் எமது வரலாற்றை நோக்கியும் மாறவேண்டும்.


பண்பாட்டு மாற்றம்  நாம் எம்மை ஆண்ட அல்லது நாம் அடிமைகளாக இருந்தவர்களிடம் இருந்து பலதை புதுமை என்று பிடித்துக்கொண்டோம் எம்மிடம் இருந்த சிறந்தவற்றை மூடநம்பிக்கை என்று எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டோம்

உதாரணங்களைச் சொல்வதைவிட நீங்களே காலம் உங்களுக்கு கற்றுத்தரும் விடையங்களில் இருந்து கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்

யார் எதைக் கூறினாலும் நம்புவதை விட உங்கள் அறிவில் எடுத்து அதை பகுத்தறிந்து நம்புங்கள்

தமிழ் ஒரு மொழிமட்டுமல்ல ஒரு பண்பாட்டு வழி அதில் கூறியுள்ள விடையங்கள் எம் முன்னோர்கள் இந்த உலகில் பல நூற்றாண்டாக வாழ்ந்து அனுபவித்த வாழ்வியல் விடையங்கள் அதிகம் இயற்கையோடு மனிதநேயத்தோடு மற்றவர்களுக்கு துன்பமின்றி இருக்கும் விடையங்கள் அவற்றை ஆய்வுசெய்து அதில் உள்ள விஞ்ஞானங்களை அறியாமல் வெறுமனவே எல்லாவற்றையும் மூடநம்பிக்கையென ஒதுக்கிவிட்டதன் விளைவுதான் பலவற்றுக்கு நாம் பிற நாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலையில் உள்ளோம்.

மிளகு தேடி வணிகத்துக்கு வந்தவர்கள் ஏன் எமது நாடுகளை ஆக்கிரமித்தார்கள் என்ற கேள்விக்கு விடை கண்டுபிடித்தாலே பல உண்மைகள் வெளிவரும் எம் முன்னோர்களின் உழைப்பும் செல்வமும் எவ்வாறு இருந்திருக்கும் என்று

பண்பாடு எப்போதும் பொருளாதாரம் சார்ந்தே இருக்கும் எமது பண்பாடு எம்மவர்களின் பொருளாதார மேன்பாட்டுக்காகவே அமைக்கப்பட்டிருக்கும் எமது ஆடை,  உணவு  ,கலை  ,விழா , சடங்கு எல்லாம் எமது பொருளாதார வளர்ச்சி எமது சமூக பொருளாதார உற்பத்தி சார்ந்தே இருக்கும் பண்பாடுகள் பாதுகாக்கப்படும்போது தான் எமது மக்களின் பொருளாதாரம் காக்கபடுவதோடு வறுமையும் இல்லாது போகும்.

 இப்போது நாம் எமது பண்பாடு நோக்கி மாறவேண்டிய தேவை உள்ளது தேசியம் ஈழம் தமிழ்பற்று பேசுவதை விட எம் பண்பாடு நோக்கி வாழவேண்டிய தேவையுள்ளது அதுவே எமது தேசத்தை பெற்றுத்தரும் எதிர்கால வழியாகவும் காணப்படுகிறது.


கல்வியும் கலையும் மாறவேண்டிய தேவையுள்ளது மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதை விட எமக்கான தனித்துவத்தை காக்கவேண்டிய தேவையுள்ளது தனித்துவம் காக்க நாம் தற்போது இந்திய, மேற்கத்திய பாணிகளை பின்பற்றுவதில் இருந்து எமக்கான அடையாளங்களை காக்க  மாறவேண்டியுள்ளது.

கல்வி என்பது அறிவுக்காக கற்கவேண்டும் வெறும் பரீட்சைக்காக போட்டிக்காக கற்பிக்கப்பட்டு குழந்தைகள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை தற்கொலை முயற்சி என்னும் செய்தி எமது பகுதிகளில் அதிகமாகியுள்ளது இந்த மன அழுத்தம் வரக்காரணம் இந்தக் கல்வி முறையே.

 குழந்தைகளின் தனித்த ஆற்றலுக்கு முக்கியம் கொடுத்து அதற்கான தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தும் கல்விமுறை இங்கு முக்கியமாகிறது இதே நிலை தொடரந்தால் நாம் மாற மறுத்தால் ஒரு நலிவுற்ற சமூகத்தையே உருவாக்கிய குற்றம் எமக்கே வந்துசேரும்.


மற்றங்கள் தொடரும்


வட்டக்கச்சி

வினோத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  அதிசயம் என்னவென்றால் இந்தப் பூமி அசையாமல் சுற்றவைத்தது யாரு சாமி ஆதியும் அந்தமும் ஆனது தூசி ஆதாரம் உயிருக்கு காற்றே சாட்...