ஞாயிறு, 19 ஜனவரி, 2025

நீயே மாமன்னன்

சில மட்டுமே இந்த உலகின் வாழ்க்கை இலக்கு என குறுக்கப்படும் போது

போட்டி அதிகரித்து,இடர்கள் சூழ்கின்றன

பரந்த உலகில் இலக்குகள் ஆயிரம் கொட்டிக்கிடக்கின்றன

உங்கள் இலக்குகளை தேடி ஓடுங்கள் 

வழிகள் இலகுவாக திறந்தே இருக்கின்றன 


இங்கே எல்லாம் எல்லோராலும் முடிந்து விடுவதில்லை 

எல்லோருக்கும் எல்லாமே கிடைத்ததுமில்லை 

ஒற்றை இலக்குகளை நோக்கி ஓடி ஓடி தோற்றுப்போனவர்களும், 

நாட்களை தொலைத்தவர்களுமே

இந்த உலகில் அதிகம்.


வெற்றி என்பது ஒற்றை சிம்மாசனமில்லை

எல்லோருக்குமான சரியாசனம்

உனக்கு நீயே முடிசூட்டிக்கொள்

உனது வாழ்க்கை இராட்சியத்தின்

மாமன்னன் நீயே


வட்டக்கச்சி வினோத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  அதிசயம் என்னவென்றால் இந்தப் பூமி அசையாமல் சுற்றவைத்தது யாரு சாமி ஆதியும் அந்தமும் ஆனது தூசி ஆதாரம் உயிருக்கு காற்றே சாட்...