தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்
தை பிறக்க வழி பிறக்கும்
அந்த நம்பிக்கையான வார்த்தை
ஒவ்வொரு தையிலும் எங்களை
உற்சாகப்படுத்தும்
எந்த வழியும் பிறக்காமல் நாங்கள் இந்த இடத்துக்கு வந்துவிடவில்லை
என்பதை ஞாபகப்படுத்தும்
உதிரம் சிந்தி வியர்வை உதிர்த்து
உயிரை விதைத்து வகுத்த பாதைகளில்
எங்கள் பாதங்கள் பயணப்படுவதை நினைவுபடுத்தும்
அடுத்த தலைமுறைக்கு நாம் அடித்தளம் இடும் வழிகளை
உறுதிப்படுத்தும்
தை பிறக்க வழி பிறக்க
வலி மறக்க இனி எல்லோரும் மகிழ்திருக்க
வட்டக்கச்சி வினோத்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக