இலக்குவை கண்ணம்மா
மருத்துவர் ஆகிவிடு
பணத்தை சேர்த்துவிடு
பொறியாளன் ஆகப் படி
வாழ்வு உயரும் நல்லபடி
கூறும் இந்த உலகமடி
உன்னை மனிதன் ஆக்கும் படி
ஏதும் செய்ததில்லையடி
பணத்தை சேர்த்துவிடு
பொறியாளன் ஆகப் படி
வாழ்வு உயரும் நல்லபடி
கூறும் இந்த உலகமடி
உன்னை மனிதன் ஆக்கும் படி
ஏதும் செய்ததில்லையடி
படி படி என தினமும் ஓதியபடி
உன் திறமையை ஒருத்தரும் பார்த்ததில்லையடி
நாட்டையாளும் திறமையை கண்டதில்லையடி
அரசவேலை மட்டும் என்று காட்டுவாரடி
உன் திறமையை ஒருத்தரும் பார்த்ததில்லையடி
நாட்டையாளும் திறமையை கண்டதில்லையடி
அரசவேலை மட்டும் என்று காட்டுவாரடி
பாட்டுபாட வைத்து விட்டு
வீட்டுக்குள்ளே கைதட்டுவாரடி
மேடையேறி ஆடி விட்டால்
ஆட்டக்காறி என கூறுவாரடி
வீட்டுக்குள்ளே கைதட்டுவாரடி
மேடையேறி ஆடி விட்டால்
ஆட்டக்காறி என கூறுவாரடி
உன்னை மற்றவரோடு ஒப்பிட்டு பேசுவாரடி
உலகில் ஒன்று போல ஒன்றில்லை புரியாரடி
வாழும் வரை போராட வேணுமடி
பண்பாட்டை எம்பாட்டில் காக்கவேணுமடி
எம் வாழ்வை எம் கையில் மாற்ற வேணுமடி
உலகில் ஒன்று போல ஒன்றில்லை புரியாரடி
வாழும் வரை போராட வேணுமடி
பண்பாட்டை எம்பாட்டில் காக்கவேணுமடி
எம் வாழ்வை எம் கையில் மாற்ற வேணுமடி
வட்டக்கச்சி
வினோத்
வினோத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக