ஒற்றையடி பாதையில
ஓரமாய் நடக்கையில
ஓராயிரம் எண்ணத்தில
உலகத்த பார்க்கையில
பெத்தவ கைபிடிச்சு
ஒன்றாக போகையில
முற்றிய நெல்லிய
நுனிபல்லால் கடிக்கையில
வற்றிய வயிற்றில்
பழய சோற்றை நிறப்பையில
அப்பனுக்கு சோறு அள்ள
அடிப்பான சத்தமிட
கம்மலுக்கு விடுமுறை வந்து
அடகுக்கடை போகையில
நாடழைத்த வேளையில
நடுச்சாம நேரத்தில
எல்லையில நிக்கையில
ஏர் பிடித்த கையால
ஏழுந்த முதற் கவித
உடம்பில குண்டுபட
உதிர்த்த முதல் வார்த
வரம்பில சாய்திருந்து
வடித்த கண்ணீர் மழை
சிறைப்பட்டு போகையில
அழிக்கப்பட்ட நம்பிகையில
எழுந்த அந்த கவிக் குழந்த
எரித்து விட்ட நேரத்திலும்
பறக்கும் இந்த தனிப் பறவ
ஓரமாய் நடக்கையில
ஓராயிரம் எண்ணத்தில
உலகத்த பார்க்கையில
பெத்தவ கைபிடிச்சு
ஒன்றாக போகையில
முற்றிய நெல்லிய
நுனிபல்லால் கடிக்கையில
வற்றிய வயிற்றில்
பழய சோற்றை நிறப்பையில
அப்பனுக்கு சோறு அள்ள
அடிப்பான சத்தமிட
கம்மலுக்கு விடுமுறை வந்து
அடகுக்கடை போகையில
நாடழைத்த வேளையில
நடுச்சாம நேரத்தில
எல்லையில நிக்கையில
ஏர் பிடித்த கையால
ஏழுந்த முதற் கவித
உடம்பில குண்டுபட
உதிர்த்த முதல் வார்த
வரம்பில சாய்திருந்து
வடித்த கண்ணீர் மழை
சிறைப்பட்டு போகையில
அழிக்கப்பட்ட நம்பிகையில
எழுந்த அந்த கவிக் குழந்த
எரித்து விட்ட நேரத்திலும்
பறக்கும் இந்த தனிப் பறவ
வட்டக்கச்சி
வினோத்
வினோத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக