இரத்தம் உறைந்த
அதிகாரக் கதிரையில்
யுத்த வெறிபிடித்த
இனவாத நகங்கள்
எந்தப் பிரச்சனைக்கு
கை வைத்தாலும்
அள்ளுவது பிணங்கள்
மக்கள் கண்ணீரைப் பிழிந்து
தம் பாதம் கழுவி
எம் இரத்தத்தில் குளித்து
இனவாத பண்ணீர் பூசும்
அதிகார பிசாசுகள்
புதைகுழிகளில் மூடியது
சடலங்களை மட்டும் தான்
ஆத்மாக்கள் கேள்வி கேட்கும்
மறவாதீர்கள்
வட்டக்கச்சி வினோத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக