வியாழன், 10 ஆகஸ்ட், 2023

பயணம்

 பேரூந்தில்  ஏறினேன்....

பட்ட பெருங்கவலை ஓதினேன்

திருவிழா கூட்டத்தோடு

ஒலிக்கும் இசைப்பாட்டு

நடத்துனர் உள்ளே அழைக்க

மெல்ல அடிகழித்தேன் உள்ள


என் கையில் பொதியோடு

தள்ளாட

தன் கையில் பில்லோடு

நடத்துனர் பின்னால

பணப்பைய எடுக்க

கைப்பை கீழ விழ

சடக்கென ஓட்டுநர் பிறேக் போட

பின்னே தள்ளாடி நான் முன்னே சாய

முன்னே இருந்த ஐய்யாவின் முழங்கை மூக்கை பதம் பார்க்க

பக்கத்து இருக்கையில்

இருந்த பிள்ளை ஆங்கிலத்தில் திட்ட

பாவம் அது  என்ஜியோவில் வேலைபோல


சற்றே நகர்ந்து முன்னே போக

சமூக சேவை உத்தியோகத்தர்

இருக்கையில் இருக்க

பக்கத்தில் கிழவி நடுங்கிய படி நிற்க்க

கச்சான் வியாபாரி ஊடறுத்து வர

வான் வெளியில் பறக்க 

பேருந்து மின்னல் போல் பாய

வாயடைத்து எல்லோரும் 

பயத்தோட இருக்கைய பிடிக்க


பல நறுமணமும் 

சில மதுசார வாசகமும்

கலந்து சுவாசத்தை அடைக்க

யன்னல் வழியே 

மழைச் சாரல்போல

எச்சில் துளிகள் பறக்க

கேட்பார் அற்று

சாளரம் மூடித் திறக்க 

உறக்கத்தில் இருந்தவர்

தலையை அது பதம் பார்க்க

புதிய வார்த்தைகள் மொழியில்

கலக்க


கிழவனை ஏற்றாத பேரூந்துகள்

குமரிகளுக்காக காத்திருந்தது

தரிப்பிடத்தில்


வட்டக்கச்சி வினோத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  அதிசயம் என்னவென்றால் இந்தப் பூமி அசையாமல் சுற்றவைத்தது யாரு சாமி ஆதியும் அந்தமும் ஆனது தூசி ஆதாரம் உயிருக்கு காற்றே சாட்...