வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

இனவாதம்

 பொருளாதார நிலை தடுமாற்றம்

இனவாதம் மட்டும் பிரமாதம்


நாடு தள்ளாடுது கடனில

கௌதமர் வருகிறார் வேகத்தில

இராவணனையும் இனம்மாற்றும் புரணத்தோட 

ஆய்வு நடக்குது அதிகாரத்தில

மக்கள் தினம்தினம் பசியில

அரசியல் நடக்குது இனவாதபிடியில


சோற்றுக்கு வழியில்லை 

மாற்ற திட்டமில்லை

பேச்சு பல்லாக்கில

நாடு பாதாலத்தில


இருப்பது சிதையுது

புதியது எதற்கு

ஆலமரம் விட்டு சூலம் இடம்பெயர

அரச மரத்தில் யார் குடியேற


பொருளாதார நிலை தடுமாற்றம்

இனவாதம் மட்டும் பிரமாதம்

சதிகார செயலில் அதிகாரம்

எல்லாக் கதிரையும் ஒருநாள் 

கறையான் ஏற்கும்

புரியாமல் போடும் ஆட்டம்

பாவம் மக்கள் திண்டாட்டம்


வட்டக்கச்சி வினோத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  அதிசயம் என்னவென்றால் இந்தப் பூமி அசையாமல் சுற்றவைத்தது யாரு சாமி ஆதியும் அந்தமும் ஆனது தூசி ஆதாரம் உயிருக்கு காற்றே சாட்...